2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

கப்பல்துறையில் ’தேசிய மகிழ்ச்சி தினம்’

Princiya Dixci   / 2021 மார்ச் 22 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பைஷல் இஸ்மாயில், துஷாரா

கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட “தேசிய மகிழ்ச்சி தின விழா”, கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீதர் தலைமையில், திருகோணமலை கப்பல்துறை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் கலந்துகொண்டிருந்தார். 

அத்துடன், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள கணக்காளர் என்.பாலநந்தன், நிர்வாக உத்தியோகத்தர் திருமதி எஸ்.நவேந்திர ராஜா, திட்டமிடல் வைத்திய அதிகாரிகளான வைத்தியர் எஸ்.சிவச் செல்வம், வைத்தியர் எஸ்.உதயனன், கப்பல்துறை தள ஆயுர்வேத வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் எஸ்.துஷதா, நிலாவெளி மாவட்ட சித்த ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.நிரன்ஜன் மற்றும் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த வைத்தியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.    

உலகிலுள்ள அனைத்து மனிதர்களினதும் நோக்கமாக இருப்பது தங்களின் வாழ்நாள் முழுவதும் மன மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதேயாகும். அதற்கமைவாக, “தேசிய மகிழ்ச்சி தினம்” பிரகடனப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 20ஆம் திகதி தேசிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .