2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

“கந்தளாய் பிரதேசத்தில் கொரோனா தொற்றில்லை”

Editorial   / 2020 மார்ச் 22 , பி.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்


திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றுக்கிலக்கான நபர் என சந்தேகிக்கப்பட்ட ஒருவருக்கு கொரொனா வைரஸ் இல்லையென அறிக்கை கிடைத்துள்ளதாக கந்தளாய் தள வைத்தியசாலை அத்தியட்கர் டி.ஜி மெலிண்டன் கொஸ்தா தெரிவித்தார்.

கந்தளாய், வான்எல, ஜயந்திபுர பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரொருவருக்கு கொரொனா வைரஸ் தொற்று தொடர்பான சந்தேகத்தின் அடிப்படையில் மட்டக்களப்பில் அமைந்துள்ள கொரொனா வைரஸ் ஆராய்ச்சி மத்திய நிலையத்துக்கு நேற்று(21) மாலை அனுப்பி வைக்கப்பட்ட நிலையிலே அதன் அறிக்கை இன்று(22) மாலை கொரொனா வைரஸ் இல்லையென கிடைத்துள்ளதாகவும், கந்தளாய் தள வைத்தியசாலை அத்தியட்சகர் தெரிவித்தார்.

குறித்த இளைஞன், ஹபரண பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றில் தொழில் புரிந்து வந்துள்ளதாகவும் இரண்டு நாள்களுக்கு முன்னர் விடுமுறையில் ஜயந்திபுரவுக்குச் சென்ற நிலையில் காய்ச்சல் காரணமாக நேற்றைய தினம்(21) கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சென்ற நிலையில், கொரோனா வைரஸ் தொடர்பான சந்தேகத்தின் அடிப்படையில் மேலதிக பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு கொரோனா வைரஸ் பாதுகாப்பு நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் அதன் அறிக்கையே பாதுகாப்பாக கொரோனா இல்லையென தகவல் கிடைத்துள்ளதாகவும் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார்.

இவைதொடர்பாக திருகோணமலை, கந்தளாய் பிரதேச வாழ் மக்கள் அச்சம்கொள்ளவேண்டிய தேவை இல்லையெனவும் ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருந்து கொள்ளுமாறும் அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .