2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

கணினி வள நிலையம் மீள திறந்து வைப்பு

Editorial   / 2022 மார்ச் 10 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை வலயக்கல்வி அலுவலகத்துக்குரிய கணினி வள நிலையம், வசதிகள் மேம்படுத்தப்பட்டு, கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜி. திசாநாயக்கவினால் நேற்று (09) மீள திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் திருகோணமலை வலயக்கல்வி பணிப்பாளர் எஸ். சிறிதரன் உட்பட அதிகாரிகள் மாணவர்களும் கலந்துகொண்டனர். இதற்காக 3.51 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

உயர்தரம் எழுதிய மாணவர்கள், பாடசாலைக் கல்வியை இடையிலே கைவிட்ட மாணவர்கள், இளைஞர் யுவதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மொழித்துறைசார் பாடநெறிகளும் இங்கு ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X