Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 மே 03 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஆர்.எம்.றிபாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீத்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை கூட்டுவதை விட, கட்சித் தலைவர்களை அழைத்து சரியான தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டால், அந்தத் தீர்மானங்கள் 225 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் முன்னிலைப்படுத்தப்படும் என்பதை, பிரதமர் விளங்கிக்கொள்ள வேண்டுமென, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
கிண்ணியா தள வைத்தியசாலை ஊழியர்களுக்கான இலவச போக்குவரத்து சேவையை நேற்று (02) ஆரம்பித்து வைத்து, ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து கருத்துரைத்த அவர், “பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை, அலரி மாளிகைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கின்றார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக அவர்கள் இல்லாத சந்தர்ப்பத்தில் அவர்களை அழைத்து என்ன விடயங்களைப் பேச இருக்கின்றார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
“இந்தக் கூட்டத்துக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, எங்களுடைய கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளமாட்டார். அதேபோன்று, ஜே.வி.பியினரும் இக்கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.
“இப்பொழுது தேர்தல் சம்பந்தமாக பல விடயங்கள் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஜூன் 20ஆம் திகதி தேர்தல் என்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. தேர்தலுக்குப் பின்னர் வாக்குகள் எண்ணுகின்ற செயற்பாடுகள் யார் மூலமாக முன்னெடுக்கப்படும். அதுவும் இராணுவமயப்படுத்தப்பட்டு, இவர்கள் தான் வெற்றி பெற்றார்கள் என்று அரசாங்கம் அறிவிக்கக்கூடிய சூழல் இருக்குமென்ற அச்சம் மக்கள் மத்தியிலே காணப்படுகின்றது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago