Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Princiya Dixci / 2021 ஒக்டோபர் 11 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.கீத்
திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மத்திய வீதியிலுள்ள கடையொன்றில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருள்கள் திருடப்பட்ட குற்றச்சாட்டில் நால்வர், இன்று (11) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கடையில் பணிபுரியும் இருவருடன் மற்றொரு நபரும் இணைந்து திருடியுள்ளனர் எனவும் அப்பொருள்களைக் கொண்டு சென்ற ஓட்டோ சாரதியும் கைது செய்துள்ளதாகவும் திருகோணமலை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
தொடர்ந்து மாதக் கணக்கில் மேற்படி கடையில் திருட்டுகள் இடம்பெற்று வந்துள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து ஒன்றரை இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டு உபகரணங்கள் மற்றும் மின்சாதனப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
திருடப்பட்ட பொருள்களை விற்று போதைபொருள்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும் கைதுசெய்யப்பட்டவர்கள் 20, 21 வயதுடையவர்கள் எனவும் தலைமையப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago