Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Princiya Dixci / 2021 மே 05 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக் , ஏ.எம்.ஏ.பரீட், ஹஸ்பர் ஏ ஹலீம்
கிண்ணியாவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கிண்ணியா கொரோனா தடுப்புக் குழுவினால் சில அதிரடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில், பின்வரும் கட்டுப்பாடுகள் நேற்றிலிருந்து அமுலுக்கு வருவதாக, கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கனி தெரிவித்தார்.
1. வாராந்த சந்தைகள், புடவைக்கடைகள் மற்றும் ஏனைய கடைகளுக்கு பெண்கள் செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதுடன் ,ஆண்கள் மாத்திரம் கடைகளுக்குச் செல்ல முடியும்.
2. கடைகளில் பொதுச் சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்ட எண்ணிக்கைக்கு அதிகமானவர்கள் இருந்தாலும் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படாமல் இருந்தாலும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதோடு, கடைகளும் மூடப்படும்.
3. வெளி இடங்களில் இருந்து யாசகம் கேட்டு வருபவர்கள் தடைசெய்யபட்டுள்ளனர்.
4. பள்ளிவாசல்களுக்கு முகக்கவசம் இன்றி வருபவர்கள் அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதோடு, அதிகமானவர்கள் முகக்கவசம் அணியவில்லையெனில் பள்ளிவாசல்கள் மூடப்படும்.
இதேவேளை, கிண்ணியா பொது வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்கள் சிலர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தொற்றாளர்கள் அதிகரிக்கும் பட்சத்தில், கிண்ணியா நகர சபையின் றஹ்மானியாவில் அமைத்துள்ள விருத்தினர் விடுதியில் அனுமதிப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
4 hours ago
5 hours ago