2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

கடற்படையினருடன் நெருங்கிய 10 பேருக்கு பரிசோதனை

Editorial   / 2020 மே 06 , பி.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை - மஹதிவுல்வெவ, பதவிசிறிபுர பகுதிகளைச் சேர்ந்த 10 பேருக்கு, கொரோனா தொற்று பரிசோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக, திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய், மஹதிவுல்வெவ, பதவிசிறிபுர போன்ற பகுதிகளில் கடற்படை வீரர்கள்  நான்கு பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்த குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மஹாதிவுல்வெவ, பதவிசிறிபுர பகுதிகளைச் சேர்ந்த கடற்படை வீரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்த 10 பேரின் மாதிரிகள், மஹதிவுல்வெவ அரச கிளினிக் மத்திய நிலையத்தில் வைத்து சேகரிக்கப்பட்டதாக, திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் விசேட வைத்திய செயலணிக் குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன், கொரோனா வைரஸ் தொடர்பில் முன்னாய்த்த நடவடிக்கைகளும்,விழிப்புணர்வூட்டல் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .