2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

ஓட்டோ - சைக்கிள் விபத்து; ஒருவர் உயிரிழப்பு

அப்துல்சலாம் யாசீம்   / 2020 பெப்ரவரி 09 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - நிலாவெளி பிரதான வீதியின் சாம்பல்தீவு பகுதியில், ஓட்டோவும் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், சைக்கிளை ஓட்டிச்சென்ற நபர் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, சிகிச்சை பலனின்றி, இன்று (09) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர், சல்லி - சாம்பல்தீவு பகுதியைச் சேர்ந்த விஜயானந்தன் ஜெசூதன் (26 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளாரென்று, நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை, அதே இடத்தைச் சேர்ந்த ஓட்டோ சாரதியான சித்திரவேல் கேதீஸன் (25 வயது), படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்தவரின் சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் நிலாவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .