2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

ஐந்து படகுகளுக்குத் தீ வைப்பு

Editorial   / 2020 மார்ச் 04 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.கீத்

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறால்குழி பிரதேசத்திலுள்ள நன்னீ எனும் பிரதேசத்தில், நேற்று (03) இரவு ஐந்து படகுகளுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு படகு காணாமல் போயுள்ளதாகவும், மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பிரதேசத்தில் மணல் அகழ்வில் ஈடுபடும் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்டுள்ள மணல் அகழ்வு, விற்பனை தொடர்பான முறண்பாடே இந்தச் சம்பவத்துக்குக் காரணமென, பொலிஸாரின் ஆரம்பகட்ட  விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்தையடுத்து குறித்த மணல் அகழும் குழுக்களிடையே மேலும் மோதல்கள் அதிகரிக்கலால் என்ற  அச்சத்தின் காரணமாக திருகோணமலை நகரில் இருந்து மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டு, நன்னீ பிரதேசத்தினதும் அதனை அண்மித்த பகுதிகளிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாக, மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மோற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .