Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை
Mayu / 2024 மே 02 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
மே தின நிகழ்வுகள் நிறைவடைந்து 24 மணித்தியாலத்துக்குள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தமது கடமைகளை ஆரம்பித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் சுற்றுச்சூழல் தொடர்பாக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும்,கிழக்கு மாகாணத்தில் சுற்றுச்சூழலை உலகளாவிய ரீதியில் அங்கீகாரம் பெற வைப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழலை முறையாக பராமரிக்கும் சந்தர்ப்பத்தில்தான் எதிர்காலத்தில் தொழிற்சாலைகளை உருவாக்க முடியும். இதனால் கிழக்கில் சுற்றுச் சூழலை பராமரிப்பு தொடர்பான சர்வதேச அங்கீகாரத்தை பெறும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.
அதன் ஒரு முக்கிய கட்டமாக சுற்றுச் சூழல் தொடர்பான ஜனாதிபதியின் சர்வதேச ஆலோசகர் எரிக் சொல்ஹெம் மற்றும் நேர்வேயின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிமான்ஸு கிளாடி ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், கிழக்கு மாகாணத்தில் உலகளாவிய அங்கீகாரம் பெற்ற சுற்றுச்சூழலை உருவாக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
மேலும், கிழக்கு மாகாண சுற்றுச்சூழல் சூழல் பாதுகாப்பு செயலாளர், திருகோணமலை,மட்டகளுப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களின் அரசாங்க அதிபர்,பிரதேச சபை செயலாளர்,நகரசபை செயலாளர் மற்றும் அரசாங்க உத்தியோகஸ்தர்கள் கிழக்கில் சுற்றுச் சூழலை பராமரிப்பு தொடர்பான சர்வதேச அங்கீகாரத்தை பெறுவதற்கு தேவையான வேலைத்திட்டங்களை வியாழக்கிழமை 02) முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
18 minute ago
23 minute ago
42 minute ago