Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 17 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், வடமலை ராஜ்குமார், ஏ.எம்.ஏ.பரீத்
“எங்கள் சேவையில், உங்களையும் இணைத்திடுங்கள்” எனும் தொனிப்பொருளில், உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தால் கொடி வாரம், கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் பீ. தர்ஷினியால் இன்று (17) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள பார்வையற்ற, பார்வைக் குறைபாடு உடையவர்களை இனங்கண்டு, அவர்களின் வாழ்வாதாரம், கல்வி, கலை, விளையாட்டு போன்ற துறைகளை மேம்படுத்தி, சமூகத்தில் கௌரவமாக வாழ்வதற்குரிய செயற்பாடுகளை, மேற்படி அமைப்பு முன்னெடுத்து வருவதாக, உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.
அத்துடன், யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், குடும்பங்களைத் தலைமையேற்று நடத்துபவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்வியை இடைநடுவில் கைவிட்டவர்கள் போன்ற பல்வேறு தேவைப்பாடு உடைய அங்கத்தவர்கள், இந்த அமைப்பின் ஊடாக வழங்கப்படும் அனைத்துச் சேவைகளையும் பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நேற்றுத் தொடக்கம் இம்மாதம் 28ஆம் திகதி வரை இந்தக் கொடி வாரம் அனுஷ்டிக்கப்பட உள்ளதாக, உதயம் விழிப்புலனற்றோர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் நிர்வாக உத்தியோகத்தர் டி.பேனாட், மாவட்டச் சமூக சேவைகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர் திருமதி பிரகலா சுதர்சன், தலைமையக சிரேஷ்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.அருள்மொழி, உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago
8 hours ago