2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

உள்ளூர் துப்பாக்கியுடன் இளைஞன் கைது

Editorial   / 2020 மே 24 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை-ரொட்டவெவ பகுதியில், உள்ளூர் துப்பாக்கியைத் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில், இளைஞரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இந்த இளைஞனை, ரொட்டவெவ இராணுவ சோதனைச்சாவடியில் வைத்து நேற்று (23) சோதனையிட்ட போதே, அவரிடமிருந்து உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கி கைப்பற்றப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர், திருகோணமலை, எத்தாபெந்திவெவ, கடவத்த குபுறுயாய வீதியைச் சேர்ந்த சுனில் சாந்தகே ஹசேல பிரியசாந்த (25 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் தொடர்பில்  முன் குற்றங்கள் பற்றிய விவரங்களைத் திரட்டி வருவதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும்  மொரவெவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X