2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

உப்புவெளி பட்ஜெட் தோற்கடிப்பு

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 03 , பி.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன்

உப்புவெளி பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான நிதியறிக்கைக்கு (பட்ஜெட்), ஆதரவாக 10 உறுப்பினாகளும்  எதிராக 12  உறுப்பினர்களும் வாக்களித்த நிலையில், நிதியறிக்கை தோற்கடிக்கப்பட்டுள்ளது.

உப்புவெளி பிரதேச சபையின் விசேட அமர்வு, தவிசாளர் டொக்டர் ஞானகுணாளன் தலைமையில் இன்று (03) நடைபெற்றது. 

22 உறுப்பினர்களை கொண்ட  இச்சபையில், நிதியறிக்கை வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் 2 பேர், பொதுஜன பெரமுன உறுப்பினர் 7 பேர், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஒருவர், வரதர் அணி உறுப்பினர் ஒருவர், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் என 12 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர். 

ஆதரவாக இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினாகள் 7 பேர், சுயேச்சைக்குழு உறுப்பினர் ஒருவர், ஐக்கிய தேசியக் கட்சியை பிரதி நிதித்துவப்படுத்தும் உப தவிசாளர் நவ்பர் உள்ளிட்ட 10 பேர் வாக்களித்திருந்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X