2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

இளம் யுவதி மாயம் - கிணற்றை தோண்ட நடவடிக்கை

Freelancer   / 2024 ஜூலை 04 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

நடேஸ்குமார் வினோதினி என்ற 25 வயதான இளம் பெண் ஒருவரே காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் சேருவில மற்றும் மூதூர் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணையை முன்னெடுத்துவரும் மூதூர் பொலிஸார் சந்தேகத்தின்பேரில் கிளிவெட்டியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதன் அடிப்படையில்  கிளிவெட்டி கிராமத்தின் எல்லைப் புறத்தில் பாழடைந்த இருக்கின்ற கிணறு ஒன்றை தோண்டுவதற்கு நீதிமன்ற அனுமதியை பெற்றுள்ளனர். 

இந்நிலையில் குறித்த பகுதியில் நேற்று (03) புதன்கிழமை முதல் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த கிணறானது நாளையதினம் (5) வெள்ளிக்கிழமை காலை மூதூர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் தோண்டப்படவுள்ளதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கிணறானது ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியுடன் அருகில் இருந்த குப்பைகளைக் கொண்டு குறித்த பெண்ணின் காதலனினால்  மூடப்பட்டுள்ளதாகவும் சந்தேகம் வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த காதலன் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிய வருகின்றது. மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .