2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

இறைச்சிக் கடைக்கு சென்றவர்கள் சுகாதார அதிகாரிகளை தொடர்புகொள்ளவும்

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 21 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம். கீத், அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை மின்சார நிலைய வீதியிலுள்ள மாட்டிறைச்சிக் கடை மற்றும் கோழி இறைச்சிக் கடைக்குச் சென்றவர்கள், சுகாதார வைத்திய அலுவலகத்தைத் தொடர்புகொள்ளுமாறு, திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த வீதியிலுள்ள கோழி இறைச்சிக் கடையில் வேலை செய்த ஜமாலியா, துலசிபுரம் பகுதிகளைச் சேர்ந்த 22, 40 வயதுடைய இருவருக்கு, நேற்று (20) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனை மேற்கொண்ட போது, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார். 

இதனால், திருகோணமலை மின்சார நிலைய வீதியிலுள்ள மாட்டிறைச்சிக் கடை மற்றும் கோழி இறைச்சிக் கடைக்குச் சென்றவர்கள், உப்புவெளி  பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கோ அல்லது திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கோ இல்லாவிட்டால் தங்களுக்கு அருகிலுள்ள பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்குமாறும்,   பணிப்பாளர் வீ. பிரேமானந், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X