2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை

இம்ரான் எம்.பியுடன் சுகாதார துறையினர் சந்திப்பு

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 07 , பி.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

கிண்ணியாவின் சுகாதாரத் துறையினருக்கும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்பிற்குமிடையிலான சந்திப்பு கிண்ணியாவில் நேற்று (06) இடம்பெற்றது.

எதிர்கால முன்னெடுப்புக்கள் சம்மந்தமான இதன்போது  விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

கட்டையாறு, மாலிந்துறை, பெரியாற்றுமுனை மற்றும் சின்ன கிண்ணியா போன்ற பகுதிகளில் அதிகரித்துவரும் புற்று நோய்கான காரணங்களும் கொரோனா, குரங்கு அம்மை போன்ற தொற்றுக்களுக்கு எதிர்காலத்தில் எவ்வாறு முகங்கொடுப்பது உள்ளிட்ட சுகதாரத் துறை சார்ந்த பல விடயங்களும் கலந்துரையாடபட்டன.

கிண்ணியா பிரதேச செயலாளர் கனி, கிண்ணியா சுகதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரிஸ்வி, குறிஞ்சாக்கேனி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் அஜித், சூறா சபை தலைவர் பரீட் (ஓய்வுபெற்ற அதிபர்) வைத்தியர்  சவ்பான் மற்றும் வைத்தியர் மாஸாத் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X