Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 ஏப்ரல் 20 , பி.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர்
அக்குறணை சம்பவத்துக்கும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கும் தொடர்புகள் உள்ளதா என திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் சந்தேகம் வெளியிட்டார்.
இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு இன்று (20) கருத்துரைக்கும் போது, “முஸ்லிம்கள் புனித ரமழான் மாதத்தின் 27ஆம் நாள் இரவில் புனித லைலத்துல் கத்ர் இரவை எதிர்பார்த்து, தமது வணக்க வழிபாடுகளை முன்னெடுக்க முனைந்த நேரத்தில், அக்குறணை பகுதி பள்ளிவாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக வந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
“பொலிஸாருக்கு வந்த அநாமதேய அழைப்பின் படி, இவ்வாறான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில்கொண்டு உடனடியாக செயல்பட்ட பாதுகாப்பு தரப்புக்கு நாம் நன்றியைத் தெரிவிக்கின்றோம்.
“அதேநேரம், ஒரேயொரு அநாமதேய அழைப்பு அல்லது அநாமதேய கடிதம் எந்தவொரு சமூகத்தின் விசேட நிகழ்வுகளையும் சீர்குலைக்கும் நிலைமையை நாம் அனுமதிக்கவும் கூடாது. இதே நிலைமை நாளை ஒரு பெரஹெர நிகழ்வுக்கோ அல்லது வேறு சமய நிகழ்வுக்கோ நடக்க நேர்ந்தால், அந்த நிகழ்வுகளை நிறுத்துவது ஒருபோதும் தீர்வாக மாட்டாது.
“வலி நிறைந்த ஈஸ்டர் தாக்குதல் நினைவை மீட்டும் நாட்களில் இப்படியான மன உளைச்சலுக்குரிய நிகழ்வுகள் நடப்பது பலத்த சந்தேகத்தை தருவதும் தவிர்க்க முடியாதது.
“அக்குறணை சம்பவத்தின் பின்னணியில் அச்சப்படும் படியாக ஏதுமில்லை என்று அரச தரப்பு அமைச்சர்கள் கூறினாலும் கூட இந்த சலசலப்பும் அதிர்வலையும் உருவாக வேண்டுமென்ற நோக்கம் இதன்பின்னணியில் உள்ளதா என்ற கேள்வி எம்மிடம் எழுவது இயல்பானதே.
“ஜனநாயக விரோதமான கொடுங்கோன்மை சட்டமான ATA எனும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் கொண்டுவரப்பட அரசு தயாராகும் நிலையில், அதற்கு தோதான சமூக நிலைமையை கட்டமைக்கும் கைங்கர்யம் இதன் பின்னணியில் உள்ளதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது” என்றார். (N)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago