Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை
Freelancer / 2022 ஜூலை 04 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ் ஷாபி
இந்திய நிவாரண உதவி திட்டத்தின்கீழ், கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் உள்ள வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களுக்கு இரண்டாம் கட்ட நிவாரணம் இன்று (4) வழங்கப்பட்டது.
இதன்போது 7250 குடும்பங்களுக்கு 10 கிலோ கிராம் வீதம் அரிசியும் 1300 பேருக்கு பால்மா பொதியும் வழங்கி வைக்கப்பட்டன.
கிண்ணியா பிரதேச செயலாளர் எம். எச்.எம். கனி தலைமையில், பிரதேச செயலகத்தில் வைத்து இந்த நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன் போது இனிய பிரதேச செயலாளர் கருத்து தெரிவிக்கையில், முக்கியமான காலகட்டத்தில் இந்த நிவாரணம் வழங்கி வைக்கப்படுகின்றது.
இதற்காக இந்திய அரசாங்கத்துக்கும் தமிழ்நாட்டு அரசாங்கத்துக்கும் நன்றிகளை தெரிவிப்பதோடு, இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நெடுங்கால தொடர்பினை எடுத்து கூறினார்.
முதலாம் கட்டத்தில் கிண்ணியாவுக்கு 4125 குடும்பங்களுக்கு அரிசியும், 300 குடும்பங்களுக்கு பால்மா பொதியும் வழங்கி வைக்கப்பட்டன.
மூன்றாம் கட்டமாகவும் நிவாரணப் பொதிகள் வர இருக்கின்றன. அவற்றையும் நாங்கள் பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்த அளிப்பதற்கு காத்திருக்கின்றோம்.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதேச செயலக ஊழியர்கள் தியாகங்களுக்கு மத்தியில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கும் இந்த நேரத்தில் நான் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago