Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை
Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 18 , பி.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
புல்மோட்டை ஆண்டாங்குள (இடைப்போக) விவசாயிகள், தங்களுக்கு தேவையான பசளை, புல்மோட்டை கமநல சேவை நிலையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நிலையில், மேற்படி விவசாயிகளுக்கு வழங்காது அது பிரிதொரு ஊருக்கு ஏற்றப்படவுள்ளதாக அறிந்துகொண்டனர்.
குறித்த விடயத்தை விவசாயிகள் உடனடியாக குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.முபாறக்கின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.
விரைந்து செயற்பட்ட தவிசாளர், கமநல திணைக்கள ஆணையாளரை தொடர்புகொண்டு, ஆண்டங்குள விவசாயிகளின் நிலைமையைத் தெளிவுபடுத்தி, பசளையை அவர்களுக்கு வழங்க வேண்டிய முக்கியத்துவத்தை உணர்த்தினார்.
இதனையடுத்து, திருகோணமலை மாவட்ட கமநல உதவி ஆணையாளர் திருமதி வர்னியின் ஒத்துழைப்பால், புல்மோட்டை கமநல சேவை நிலையத்தில் வைத்து நிலைய கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம். ரனூஸின் தலைமையில், ஆண்டங்குள விவசாயிகளுக்கு பசளை வழங்கிவைக்கப்பட்டதாக குச்சவெளி தவிசாளர் தெரிவித்தார்.
உரிய நேரத்தில் விவசாயிகளுக்கான பசளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்த குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளருக்கு விவசாயிகள் தமது நன்றியைத் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
5 hours ago