Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Mayu / 2024 மே 27 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு காணுமாறு கோரி திருகோணமலை -கந்தளாய் முள்ளிபொத்தானை சிங்கள வித்தியாலய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் திங்கட்கிழமை (27) திருகோணமலை கொழும்பு பிரதான வீதியின் 96ஆவது குறுக்கு வழியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததுடன், ஒரு மணித்தியாலத்தின் பின்னர் தம்பலகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த இடத்திற்கு வந்து வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினார்.
அப்போது பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே அமைதியின்னை ஏற்பட்டது.
பின்னர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கந்தளாய் கல்வி வலயக் கல்விப் பணிப்பாளர் காமினி பண்டாரவை அழைத்து பெற்றோருடன் கலந்துரையாடினார்.
அந்த கலந்துரையாடலில் ஏற்பட்ட உடன்பாட்டின்படி, இன்னும் ஒரு வாரத்தில் கோரிக்கைக்கு தகுந்த பதில் வழங்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .