Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Princiya Dixci / 2021 ஒக்டோபர் 28 , மு.ப. 08:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு உதவுவதற்காக கரும்பு, பித்தளை, களிமண், தளபாடங்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சால் ஆரம்பிக்கப்பட்ட “விடாத” திட்டத்தின் கீழ், கந்தளாய் தம்பலாகாமம் பிரதேசத்தில் பனை ஓலை அலங்கார வடிவமைப்பாளர்களுக்கு இயந்திரங்கள், நேற்று (27) வழங்கி வைக்கப்பட்டன.
அவர்கள் தங்கள் தயாரிப்புகளை தயாரிப்பதற்கும் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருள்களை வாங்குவதில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வுகளை வழங்குவதற்கும் இவ் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த உபகரணங்களை, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான கபில அத்துக்கோரல மற்றும் திருகோணமலை மாவட்டச் செயலாளர் சமன் தர்சன பாண்டிக்கோரல ஆகியோர் இணைந்து, பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
4 hours ago
5 hours ago