2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

அப்துல்லா மஹ்ரூப் பிணையில் விடுதலை

Princiya Dixci   / 2021 ஜனவரி 06 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

முன்னாள் பிரதி அமைச்சரும் திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப் மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் பொது முகாமையாளர் மொஹமட் அஸ்லம் ஆகிய இருவரும், இன்று (06) பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.  

இந்த இருவரையும் 5 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையின் அடிப்படையில் பிணை விடுதலை செய்த கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றம்,  இருவரினதும் கடவுச்சீட்டை தடை செய்துள்ளது.

2015 முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் லங்கா சதொசவுக்குச் சொந்தமான வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் திருகோணமலை – கிண்ணியா பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். 

இதேவேளை, இந்த வழக்கு, மார்ச் மாதம் 24 ஆம் திகதி மேலதிக விசாரணைக்கு மீண்டும் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X