Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Princiya Dixci / 2021 மார்ச் 10 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீட், ஒலுமுதீன் கியாஸ், எப்.முபாரக், அ.அச்சுதன்
கிழக்கு மாகாண வருடாந்த அதிபர் இடமாற்றம், உரிய சட்டதிட்டங்களுக்கமைய நியாயமான முறையிலேயே செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் எம்.சீ.எல்.பெர்ணான்டோ தெரிவித்தார்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சால் வெளியிடப்பட்ட அதிபர் இடமாற்ற சுற்றுநிரூபத்துக்கமைய, அதிபர்களிடம் விண்ணப்பம் கோரப்பட்டு, அதன் அடிப்படையிலேயே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குறித்த நியமனத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு விளக்கமளித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, “இந்த இடமாற்றத்துக்கா கிழக்கு மாகாண ஆளுநரின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேன்முறையீடு செய்ய விரும்பினால் அதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இதன்மூலம் எந்தவோர் அதிபருக்கும் அநியாயம் இடம்பெறுவற்கான வாய்ப்பு இல்லை.
“சில வலயக் கல்வி அலுவலகப் பிரிவுகளில் மேலதிக அதிபர்கள் கடமையில் இருக்கின்றார்கள். இன்னும் சில அதிபர்கள் பாடசாலைப் பொறுப்புகள் இன்றி இருக்கின்றார்கள். சில வலயங்களில் அதிபர் பற்றாக்குறை இருக்கின்றது. இந்நிலையில் அதிபர்களை சமப்படுத்த நடவடிக்கையெடுக்குமாறு கணக்காய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
“இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டே இதற்காக நியமிக்கப்பட்ட இடமாற்ற சபை மூலம் இந்த அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
“கல்முனை வலயத்தில் மேலதிக அதிபர்கள் இருப்பதாக கணக்காய்வுத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த விடயம் மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கும் தெரியும்.
“இந்த இடமாற்ற சபையில் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் பிரதிநிதி ஒருவரும் இடம்பெற்றுள்ளார். இதனைவிட இந்த அதிபர் இடமாற்ற மேன்முறையீட்டு சபை உறுப்பினராகவும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் இருக்கின்றார்.
“எனினும், கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் இதில் தனக்கு தொடர்பில்லை என ஊடகங்களில் கருத்து வெளியிட்டுள்ளமை குறித்து நான் கவலையடைகின்றேன்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
7 hours ago