2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

அடகு வைக்கப்பட்ட வயல் காணிகளை மீட்க கடன் உதவி

Princiya Dixci   / 2021 மார்ச் 23 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, மொரவெவ பிரதேசத்தில் அடகு வைக்கப்பட்ட வயல் காணிகளை மீண்டும் உரிமையாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு கடன் அடிப்படையில் உதவிகள் வழங்கப்பட உள்ளதாக மொரவெவ பிரதேச சபையின் தவிசாளர் ஜகத் குமார வேரகொட தெரிவித்தார்.

மொரவெவ பிரதேசத்தில் மின்சாரம் பெற்றுக்கொள்ள முடியாத சமுர்த்தி பயனாளிகளுக்கு "தெயட எலிய" 
வேலைத்திட்டத்தின் கீழ் மின் இணைப்புகள் வழங்குவதற்கான கலந்துரையாடல், நேற்று (22) நடைபெற்ற போதே, அவர் இதனை தெரிவித்தார்.

மொரவெவ பிரதேசத்தில் அதிகளவில் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருபவர்கள் அதிகமாக இருப்பதாகவும் அவர்களுடைய காணிகள் அடகு வைக்கப்பட்டிருப்பதாகவும் இதனால் இவர்கள் தொடர்ச்சியாக வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வருவதாகவும் தவிசாளர் சுட்டிக்காட்டினார். 

எனவே, விவசாயிகளை மேம்படுத்தும் நோக்கில், அடகு வைக்கப்பட்டுள்ள காணிகளை மீண்டும் உரிமையாளர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரளவின் ஆலோசனைக்கு அமைவாக, இலகு கடன் வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, "தெயட எலிய" திட்டத்தின் கீழ் மின்சாரம் வழங்கப்படாதவர்கள் கவலைப்படத் தேவையில்லை எனவும் தொடர்ந்தும் கட்டம் கட்டமாக மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தவிசாளர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .