2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் கைகோர்ப்பு

Editorial   / 2020 மார்ச் 15 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆர்.எம்.அன்வர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துகொண்டார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு, நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல், கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் நேற்று (14) மாலை நடைபெற்றது.

இதன்போது, மேற்படி கட்சியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லா மஃறூப் முன்னிலையில் உத்தியோகபூர்வமாக, அன்வர், இணைந்துகொண்டார்.

மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்ட ஆர்.எம்.அன்வர், முன்னதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் பயணித்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .