2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை

5 தலைவர்கள் நியமனம்

Mayu   / 2024 நவம்பர் 06 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

கிழக்கு மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, சுற்றுலா பணியகம், கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு, சாலை மற்றும் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை, முன்பள்ளி கல்வி பணியகம் ஆகிய 5 அதிகார சபைகளிக்கான தலைவர்களை நியமித்து அவர்களுக்கான நியமனக் கடிதங்களை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர செவ்வாய்க்கிழமை (5) திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலக்தில் வைத்து வழங்கிவைத்தார்.

ரஜினி கணேசபிள்ளை

மாகாண அதிகார சபைக்களுக்கான தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களை நியமித்து அவர்களுக்கான நியமனக்கடிதங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு திருகோணமலை ஆளுநர் காரியாலயத்தில் இடம்பெற்றது இதில் அதிதியாக  கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, கலந்துகொண்டு அவர்களுக்கான நியமனக்கடிதங்களை வழங்கிவைத்தார்.

கித்சிறி நவரத்ன

இதில் மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தலைவராக ஜி.சுகுமாறன்,  மாகாண சுற்றுலா பணியக தலைவராக எம்.ஜி.பிரியந்த மலவனகே, மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு தலைவராக திருமதி.ரஜினி கணேசபிள்ளை, மாகாண சாலை மற்றும் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தலைவராக கித்சிறி நவரத்ன,  மாகாண முன்பள்ளி கல்வி பணியக தலைவராக அ.விஜயானந்தமூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டு அவர்களுக்கான நியமன கடிதங்களை அளுநர் வழங்கிவைத்தார்.

எம்.ஜி.பிரியந்த மலவனகே

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.  ரத்நாயக்க, கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஜி.சுகுமாறன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X