2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை

10 நாட்களின் பின் மண்ணெண்ணெய் விநியோகம்

Freelancer   / 2022 ஜூன் 17 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

மூதூர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சுமார் 10 நாட்களுக்குப் பின்னர் நேற்று வியாழக்கிழமை  ஒருவருக்கு 300 ரூபாய்க்கு மாத்திரமே மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டது.

நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அசௌகரியங்களுக்கு மத்தியில் மண்ணெண்ணெய்யை கொள்வனவு செய்ததையும் அவதானிக்க முடிந்தது.

இதன்போது கருத்து தெரிவித்த மக்கள், 300 ரூபாய்க்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் எமக்கு போதாது எனவும்  இந்த அரசாங்கத்தில்  கஷ்டப்படுவதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்

 

மேலும், மீனவர்கள் மண்ணெண்ணெய் தட்டுப்பாட்டால் கஷ்டங்களை எதிர் நோக்குவதாகவும் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X