2025 ஜனவரி 28, செவ்வாய்க்கிழமை

ஹோமாகமவில் துப்பாக்கிச் சூடு

Editorial   / 2024 நவம்பர் 15 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹோமாகம, கலவிலவத்த பிரதேசத்தில் இன்று (15) காலை இனந்தெரியாத நபர் ஒருவர், வர்த்தகர் என கூறப்படும் நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் படுகாயமடைந்த நிலையில் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடலில் இரண்டு தோட்டாக்கள் பாய்ந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் சத்திரசிகிச்சைக்கு பின்னர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், பழிவாங்கும் நோக்கில் இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X