2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை

ஹைலண்ட யோகட், திரவ பாலின் விலை குறைந்தது

S.Renuka   / 2025 ஏப்ரல் 02 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹைலண்ட யோகட் விலையை செவ்வாய்க்கிழமை (01) முதல் 10 ரூபாவினால் குறைப்பதற்கு மில்கோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, முன்னர் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஹைலண்ட் யோகட் ஒன்றின் விலை  புதிய விலை 70 ரூபாய் என்று மில்கோ நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை மேலாளர் சம்பத் குணரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், மில்கோவால் உற்பத்தி செய்யப்படும் திரவ பால் பொருட்களின் விலைகளும் பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், குறைக்கப்பட்டுள்ளதாக மேலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், முன்னதாக 225 ரூபாய்க்கு விற்கப்பட்ட 450 மில்லி லீற்றர் நீண்ட நாள் பயன்படுத்தக் கூடிய திரவப் பாலின் விலை குறைக்கப்பட்டு 200 ரூபாயாக பதிவாகியுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X