2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

ஷஷிக்கு எதிரான வழக்குக்கு திகதி

Editorial   / 2024 ஒக்டோபர் 09 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

போலி பிறப்புச் சான்றிதழைச் சமர்ப்பித்து சட்டவிரோத இராஜதந்திர கடவுச்சீட்டைப் பெற்றதாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின்  மனைவி திருமதி ஷஷி வீரவன்சவுக்கு எதிரான வழக்கின் பிரதிவாதிகளின் ஆட்சேபனையை நிராகரித்த கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனுவெல, வழக்கு விசாரணையை ஜனவரி 28 ஆம் திகதி ஆரம்பிக்குமாறு செவ்வாய்க்கிழமை (08)உத்தரவிட்டார்.

வழக்கின் சாட்சியாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் குடிவரவுக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் டபிள்யூ. ஆர் சூலானந்த பெரேராவை அன்றைய தினம் நீதிமன்றில் சாட்சியமளிக்குமாறு  இரு சாட்சிகளுக்கு உத்தரவிடுமாறு நோட்டீஸ்   பிறப்பித்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​குற்றம் சாட்டப்பட்ட திருமதி ஷஷி வீரவன்ச நீதிமன்றத்தில் ஆஜரானார். எச். சமிந்த என்ற நபர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம்,  குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர். 

கடந்த 2010ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி குடிவரவுக் கட்டுப்பாட்டாளரிடம்   வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக தவறான பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பத்தை சமர்ப்பித்த குற்றச்சாட்டின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X