2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வௌ்ளத்தில் மூழ்கிய கப்: போராடி மீட்ட இளைஞர்கள்

Editorial   / 2024 ஜூன் 03 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

வௌ்ளநீர் அலையில் சிக்குண்ட கப் ரக வாகனத்தை அவ்விடத்தில் இருந்த இளைஞர்கள் இணைந்து​ பெரும் முயற்சிக்குப் பின்னர் மீட்டெடுத்துள்ளனர். இந்த சம்பவம், பெலும்மஹர சந்தியில், கொடகெத பாலத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

அந்த கப் ரக வாகனம், அலையில் சிக்குண்டு அள்ளிச்சென்றபோது, பெரும் போராட்டத்துக்கு மத்தியில் இளைஞர்கள் தடுத்து நிறுத்தினர்.  

அந்த சந்தியில் பல அடிக்கு மேல் வெள்ளநீர் நிரம்பியிருந்தது. அந்த வௌ்ளநீர் அலையில் சிக்குண்ட கப் ரக வாகனம், சாரதியின் கட்டுப்பாட்டை மீறி, இழுத்துச் செல்லப்பட்ட போதே, அங்கிருந்த இளைஞர்கள் ஒன்றுக்கூடி, கப் வாகனத்தை மீட்டதுடன், சாரதியை​யும் காப்பாற்றியுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .