Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
S.Renuka / 2025 மார்ச் 16 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனியார் நிறுவனங்கள் மூலம் வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்கள், தாங்கள் பயன்படுத்த விரும்பும் நிறுவனங்கள் குறித்த தகவலுக்கு 1989 என்ற உதவி எண்ணை அழைக்குமாறு வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் அறிவுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா தொடர்பான அமைச்சக ஆலோசனைக் குழு கூட்டத்தில், வேலைவாய்ப்புக்காக வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் அண்மையில் நடைபெற்ற வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பங்குபற்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இதற்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் விஜத ஹேரத் இதனைக் கூறியுள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தால் அங்கீகரிக்கப்பட்ட முகவர் நிறுவனங்கள் மற்றும் கட்டணங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் பணியகத்தின் இணையதளத்தில் அறிந்துகொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு தரப்பினரும் அங்கீகரிக்கப்பட்ட தொகையை விட அதிகமாகப் பெற்றுக்கொண்டால் அல்லது அனுமதிப்பத்திரம் இன்றி ஏதேனும் செயற்பாடுகளில் ஈடுபட்டால் பணியகத்தில் முறைப்பாடு செய்ய முடியும் என அதிகாரிகளினால் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் வசிக்கும் இலங்கையர்கள் அந்நாட்டின் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதாகவும் அவர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாகவும் இந்த கூட்டத்தின் போது குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
40 minute ago
40 minute ago