2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

விறகு லொறி ரயிலுடன் மோதியதில் ஒருவர் பலி

Editorial   / 2024 ஓகஸ்ட் 19 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

விறகு ஏற்றிச் சென்ற லொறி, ரயிலுடன் மோதியதில் அதில் பயணித்த இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொஸ்கொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம், கொஸ்கொட இடுருவா பகுதியில் உள்ள புகையிரத கடவையில் திங்கட்கிழமை (19) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

 ஐம்பத்தைந்து வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளதாகவும், அவரும் பலத்த காயமடைந்த நபரும் இடுருவா, மஹா இதுருவா பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொஸ்கொடவில் இருந்து விறகு ஏற்றிச் சென்ற லொறியொன்று காலியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலுடன்  மோதியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

ரயிலுடன் மோதிய லொறி நசுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X