Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை
Editorial / 2024 ஒக்டோபர் 28 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற போராட்டத்தின் போது பொதுமக்களுக்கும் சாதாரண போக்குவரத்திற்கும் இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு திங்கட்கிழமை (28) ஒத்திவைக்கப்பட்டது.
சுகயீனம் காரணமாகஅவர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வீரவன்ச வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், திட்டமிடப்பட்ட விசாரணைக்கு ஆஜராக முடியாமல் போனதாக அவரது வழக்கறிஞர் குழு நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தது.
கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே வழக்கு விசாரணையை நவம்பர் 25ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். வழக்கின் குற்றம் சாட்டப்பட்டவர்களையும் சாட்சிகளையும் அடுத்த விசாரணைத் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது.
2016 ஆம் ஆண்டு பௌத்தலோக மாவத்தையில் பிரதான வீதிகளை மறித்து பொதுமக்களுக்கும் சாதாரண போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்திய போராட்டத்திற்கு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மற்றும் ஐவர் தலைமைத்துவம் வழங்கியதாக கறுவாத்தோட்ட பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
2016 பெப்ரவரி 6, அன்று, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் ஸெய்த் ராத் அல் ஹுசைனின் வருகைக்கு எதிராக தேசிய சுதந்திர முன்னணி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, ஜயந்த சமரவீர, வீரகுமார திஸாநாயக்க, பியசிறி விஜேநாயக்க, ரொஜர் செனவிரத்ன, மொஹமட் முஸம்மில் மற்றும் டொன் லூசியன் உள்ளிட்ட 6 சந்தேகநபர்கள் இந்த வழக்கில் சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர். ஏழாவது சந்தேகநபரான சமிந்த ஜெயலால் நீதிமன்றத்தை ஏய்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago