2025 ஜனவரி 28, செவ்வாய்க்கிழமை

விபர சேகரிப்பு அலுவல்கள் நிறைவு

Simrith   / 2024 நவம்பர் 20 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்று (19) மற்றும் இன்று (20) பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்ற பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வின் ஆரம்ப அமர்வுக்காக புதிதாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக அமைக்கப்பட்ட விபர சேகரிப்பு பட்டறை வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

இந்த முயற்சியில் முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் போது, ​​அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பயனுள்ள அத்தியாவசிய தகவல்கள் மற்றும் ஆவணங்கள் வழங்கப்பட்டன. எம்.பி.க்களின் அடையாள அட்டைகளுக்கு புகைப்படம் எடுப்பது மற்றும் மின்னணு வாக்குப்பதிவு முறைக்கான கைரேகைகளை பெறுவது உள்ளிட்ட செயல்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.

அத்துடன், பத்தாவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வின் தொடக்க கூட்டத்திற்கு தயாராகும் வகையில், பாராளுமன்ற இணையதளம் வழியாக ஒன்லைன் அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இது எம்.பி.க்கள் தேவையான தகவல்களை டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்க வழி செய்ததுடன், மேலும் இச் செயல்முறைகளை இலகுபடுத்தியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X