2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

விபத்தில் மனைவி பலி ; கணவன் காயம்

Janu   / 2024 டிசெம்பர் 03 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் - பல்லம , அடம்மன பிரதேசத்தில் திங்கட்கிழமை (2) இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாதம்பை , தனிமெல்கம பகுதியைச் சேர்ந்த  ஏ.இந்திரா (வயது 30) எனும் திருமணமான பெண்ணொருவரே இவ்வாறு  உயிரிழந்துள்ளதுடன், அவரது கணவரான 32 வயதுடைய நபர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என பல்லம பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தம்பதியினர் ஆனமடுவ, ஊரியாவ பகுதியில் மரண வீடொன்றுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு, மீண்டும் மாதம்பை பகுதியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, குறித்த கணவனும், மனைவியும் பயணித்த மோட்டார் சைக்கிளும், சிலாபத்தில் இருந்து ஆனமடுவ பகுதியை நோக்கி சென்றுகொண்டிருந்த  கெப் வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த விபத்து தொடர்பில் பல்லம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரஸீன் ரஸ்மின்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .