Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2023 செப்டெம்பர் 06 , பி.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாதிவெல பாராளுமன்ற உறுப்பினரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இராஜாங்க அமைச்சர் ஒருவர் தனக்கு வழங்கப்பட்ட கைத்துப்பாக்கியால் வானத்தை நோக்கி பல முறை சுட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உறுப்பினரின் வீட்டு மேல் மாடிக்கு குடிபோதையில் வந்த உறுப்பினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் மூன்று முறை சுட்டதாகவும் அதே வட்டாரங்களில் இருந்து கூறப்படுகிறது.
இராஜாங்க அமைச்சர் கடந்த காலங்களில் பல சர்ச்சைக்குரிய சம்பவங்களால் சமூகத்தில் விமர்சிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை (5) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினரால் உயர் அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
9 hours ago