2025 மார்ச் 31, திங்கட்கிழமை

வாக்காளருக்கான செலவு வரையறை வெளியானது

Editorial   / 2025 மார்ச் 27 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்கு அதிகபட்சமாக எவ்வளவு செலவு செய்யலாம் என்பதை குறிப்பிட்டு தேர்தல் ஆணைக்குழு  வர்த்தமானி அறிவிப்பை, வியாழக்கிழமை (27) வெளியிட்டது.

அதன்படி, ஒரு வேட்பாளர், வாக்காளர் ஒருவருக்காக  74  ரூபாய் முதல் 160 ரூபாய்க்கு இடைப்பட்ட தொகையை செலவழிக்கலாம்.

தேர்தல்கள் நடைபெற உள்ள 366 உள்ளூராட்சி மன்றங்களுக்கு இந்தத் தொகை தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்களின் போது லஞ்சம் அல்லது பரிசுகள் மூலம் வாக்குகளைப் பெறுவதைத் தடுக்க, ஆணைக்குழு தனதுக்கு உள்ள அதிகாரங்களுக்குள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதற்கிடையில், உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி கடந்த 24 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு  மே 6 ஆம் திகதி நடைபெறும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X