2024 டிசெம்பர் 20, வெள்ளிக்கிழமை

வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஐவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை உறுதியானது

Freelancer   / 2024 டிசெம்பர் 20 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழிலதிபர் மொஹமட் ஷியாம் கொலை சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உட்பட ஐந்து பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதி குழாம் விதித்த மரண தண்டனையை, உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இது தொடர்பில், பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று அறிவிக்கப்பட்டது. 

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, அவரது மகன் ரவிந்து குணவர்தன மற்றும் குறித்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஐவரும் சிறைச்சாலை அதிகாரிகளினால் நீதிமன்றில், இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

குறித்த தண்டனைக்கு எதிராக பிரதிவாதிகள் முன்வைத்த மேன்முறையீட்டு மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே, பிரதிவாதிகளுக்கு அறிவித்தார். 

அதன்படி, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழுவினால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாக, பிரதிவாதிகளுக்கு நீதிபதி ஆதித்ய படபாண்டிகே தெரிவித்தார். AN



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .