2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

”விவசாயிகள் துப்பாக்கிகளைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்”

Simrith   / 2024 டிசெம்பர் 09 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயிர்களை அழிக்கும் விலங்குகளுக்கு எதிராக நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் நடவடிக்கை எடுக்க விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹா தெரிவித்துள்ளார்.

"பயிர்களை அழிக்கும் பல்வேறு விலங்குகளின் உயிருக்கு சேதமின்றி அவற்றை விரட்டுவதற்கு சுட அனுமதிக்கும் வகையிலான சட்ட ஏற்பாடுகள் வழங்கப்பட வேண்டும்" என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜயமஹா இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

"விலங்குகளை விரட்ட விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களுக்கு துப்பாக்கிகள் வழங்கப்பட வேண்டும் என்று நான் முன்மொழிந்தபோது நான் கேலி செய்யப்பட்டேன். தேர்தல் பிரசாரத்தின் போது நான் பிரேரணையை கொண்டு வந்த போது பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்னவே என்னை கேலி செய்தார்.

எவ்வாறாயினும், பயிர்களை அழிக்கும் விலங்குகளுக்கு எதிராக மக்கள் நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று அமைச்சர் லால்காந்த அவர்களே முன்மொழிந்தார்.

மிருகங்களை துரத்துவதற்கு மக்கள் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகளை வழங்கும் சட்டத்தை கொண்டு வருவதன் மூலம் அமைச்சர் இதை செயல்படுத்த வேண்டும், ”என்று அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .