Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 14, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 14 , மு.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஹஸ்பர்
பஸ்களுக்கு மேலதிகமாக பூட்டப்பட்டுள்ள அலங்கார பொருட்களை தடை செய்ய கோருவது வாழ்வாதாரத்தை அழிக்கும் செயல் என திருகோணமலை மாவட்ட தனியார் பேருந்து வரையறுக்கப்பட்ட சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (13) இடம் பெற்ற குறித்த சங்கத்தின் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர்
ஆபத்தை ஏற்படுத்தும் என்றால் அந்த மேலதிக பொருட்களை தடை செய்யலாம் . பஸ்களால் நாளாந்தம் கிடைக்கும் வருமானத்தை விட வாடகைக்கு அமர்த்தி பெறும் வருமானம் அதிகம் .வாகனத்தை வாடகைக்கு அமர்த்துபவர், ஆசனங்கள் மற்றும் பஸ்ஸின் உட்புற, வெளிப்புற அலங்காரத்தை பொறுத்தே முன்னுரிமைப்படுத்தி வாடகைக்கு அமர்த்துவார்கள்.
அதை விடுத்து ஒன்றுமில்லாமல் மரண வீட்டிற்கு செல்வது போன்று இருந்தால் யாரும் வாடகைக்கு பஸ்களை அமர்த்த மாட்டார்கள். வாகனத்தில் உள்ள வெள்ளிரும்பு, தொலைக்காட்சி, மின்குமிழ் போன்றன மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் உள்ளதுடன் எமது தொழிலை செய்து கொண்டு செல்கிறோம்
அதை விடுத்து அரசாங்கம் மேலதிக பொருட்களை அகற்ற சொல்வதானால் எமது வாழ்வாதரமும் அழிக்கப்படுவதுடன் அலங்கார வெள்ளிரும்பு பொருட்களை விற்பனை செய்பவர்களின் வாழ்வாதாரமும் அளிக்கப்படுகிறது.இதனால் வருமானமிழப்பு ஏற்பட்டுள்ளது. வருமான இல்லாது போனால் அரசாங்கமே எமக்கு உழைத்து தரவேண்டும் என்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago
3 hours ago