Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை
Editorial / 2024 டிசெம்பர் 06 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
4 வயது சிறுமியை கொலை செய்து சடலத்தை மலசல குழியில் வீசியதாகக் கூறப்படும் சிறுமியின் தாயின் இரண்டாவது கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் கம்பஹா – அக்கரவிட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தனது மகள் கடந்த 02 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக அவரின் தாய் கம்பஹா பொலிஸ் நிலையத்தில் வியாழக்கிழமை (05) முறைப்பாடு அளித்துள்ளார்.
இதனையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் , வீடொன்றில் உள்ள மலசல குழியிலிருந்து சிறுமியின் சடலத்தை கண்டுபிடித்துள்ளனர்.
சிறுமியின் தாயின் இரண்டாவது கணவன் சிறுமியை கொலை செய்து சடலத்தை மலசல குழியில் வீசியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சந்தேக நபரான சிறுமியின் தாயின் இரண்டாவது கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
41 minute ago