Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 27, திங்கட்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 26 , பி.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பிலிருந்து புத்தளம் வழியாக மன்னார் வரையிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகளில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் அனர்த்த முகாமைத்துவ பிரிவு இந்த அறுவுறுத்தலை வெளியிட்டுள்ளது. இது நாளை (27) பிற்பகல் 1:30 மணி வரை செல்லுபடியாகும்.
கொழும்பிலிருந்து புத்தளம் வழியாக மன்னார் வரையிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு (50-60) வரை அதிகரிக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு மீனவ மற்றும் கடற்படை சமூகத்திற்கு மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
44 minute ago
2 hours ago