Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 04, சனிக்கிழமை
Simrith / 2025 ஜனவரி 01 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் வரலாற்றில் 2024ஆம் ஆண்டில் அதிகளவான வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காகப் புறப்பட்டவர்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் 2022 இல் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு வேலைவாய்ப்புப் புறப்பாடுகள் பதிவாகியிருந்ததாகவும், கடந்த 2019 முதல் 2024 வரையான ஆறு வருடங்களில் மொத்தம் 1.3 மில்லியன் பேர் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளதாக SLBFE தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டில், மொத்தம் 185,162 ஆண்களும் 127,674 பெண்களும் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான இலங்கைத் தொழிலாளர்கள் குவைத்துக்கு (77,546) சென்றுள்ளதுடன், 51,550 பேர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு (UAE) சென்றுள்ளனர்.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், தென் கொரியா (7098), இஸ்ரேல் (9665), ஜப்பான் (8665) ஆகிய நாடுகளுக்கு அதிக எண்ணிக்கையிலான இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளியேறியுள்ளனர்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மூலம் ஈட்டப்பட்ட அந்நியச் செலாவணியும் 2024 இல் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டியுள்ளது, நவம்பர் மாத இறுதியில் 6462 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அந்நிய செலாவணி பதிவாகியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
15 minute ago
27 minute ago
3 hours ago