2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை

விலங்குகளின் பாகங்களுடன் ஒருவர் கைது

Editorial   / 2025 மார்ச் 31 , மு.ப. 10:18 - 0     - 25

கஜமுத்துக்கள் என சந்தேகிக்கப்படும் பல விலங்குகளின் பாகங்களுடன் வாழைச்சேனையில் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வட்டவான் பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், பல விலங்குகளின் பாகங்களை வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டார்.

கிடைத்த தகவலுக்கு அமைய கைது செய்யப்பட்ட 34 வயதான நபர் மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் வாழைச்சேனை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X