Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
R.Maheshwary / 2022 ஒக்டோபர் 19 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவருடன், இந்தியாவில் தங்கியிருந்த பெண்ணொருவர், இருவரும் ஒன்றாக தங்கியிருந்ததை தனது மொபைல் போனில் வீடியோ எடுத்து,அதனை வர்த்தகரின் வீட்டாரிடம் காட்டப் போவதாக அச்சுறுத்தி, 70 இலட்சம் ரூபாய் கப்பம் கேட்ட நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை பிரிவு குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட குறித்த பெண், மாளிகாவத்த பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் என்றும் தெரியவந்துள்ளது.
பேருவளை பிரதேசத்திலுள்ள இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.முறைப்பாட்டாளர் வியாபாரம் விடயமாக இந்தியாவுக்குச் சென்றிருந்த போது, குறித்த பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளதாகவும் பின்னர் இருவரும் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த இருவரும் இந்த மாதம் 14ஆம் திகதி இலங்கைக்கு திரும்பி வந்துள்ளதுடன், பின்னர் இந்தப் பெண், வர்த்தகரை மிரட்டி 70 இலட்ச ரூபாய் கப்பம் கோரியுள்ளார். பணம் தராவிட்டால் இருவரும் ஒன்றாக இருந்த வீடியோவை வர்த்தகரின் வீட்டாரிடம் காண்பிப்பதாக அச்சுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து வர்த்தகர் அப்பெண்ணின் வங்கிக் கணக்குக்கு 10இலட்ச ரூபாயை வைப்பலிட்டுள்ளார்.
எனினும் இரண்டாவது தடவையாகவும் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய அப்பெண், மிகுதி பணத்தை கோரி அச்சுறுத்திய நிலையிலேயே வர்த்தகர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து பணத்தைப் பெற்றுக்கொள்ள களுத்துறை நகருக்கு வருமாறு அந்தப் பெண்ணை அழைக்குமாறு பொலிஸார் வர்த்தகரிடம் தெரிவித்துள்ளதுடன், பணத்தைப் பெற்றுக்கொள்ள அப்பெண் வருகைத் தந்த போது கைதுசெய்துள்ளனர்..
.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
26 Apr 2025