2025 ஏப்ரல் 13, ஞாயிற்றுக்கிழமை

விருந்துபசார ஏற்பாடுகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்

Freelancer   / 2025 ஏப்ரல் 12 , பி.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நிதி நன்கொடைகளைப் பெற்று பொலிஸ் நிலையங்களில் விருந்துபசாரங்களை ஏற்பாடு செய்வதைத் தவிர்க்குமாறு சகல பொலிஸ் அதிகாரிகளுக்கும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய  அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளைப் பாராட்டும் விதமாக அவர்களுக்கு பரிசுகள் வழங்கக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார். 

இவ்வாறு வழங்கப்படும் பணத்தையோ அல்லது பரிசுகளையோ சிரேஷ்ட அதிகாரிகள் ஏற்கக்கூடாது. 

இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றாத பட்சத்தில் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X