Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 11, செவ்வாய்க்கிழமை
Simrith / 2024 டிசெம்பர் 19 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
வைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயது வர்த்தமானியில் வெளியிடப்படாதமை குறித்த அமைதியின்மை மற்றும் நிச்சயமற்ற தன்மையை அடுத்து, 200 இற்கும் மேற்பட்ட நிபுணர்கள் முன்கூட்டியே ஓய்வு பெறக்கூடிய அபாயம் உள்ளதால், அரச நிர்வாக அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.
அரச வைத்தியசாலைகளில் நிபுணத்துவம் பெற்ற வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதை, 2018ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளவாறு 63 வயதாகவே தொடர வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முன்வைத்து, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த விடயம் தொடர்பாக புதிய குறிப்பொன்றை சமர்ப்பித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
குறித்த சுற்றறிக்கை அல்லது வர்த்தமானியை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதம் இலங்கையில் 200 இற்கும் மேற்பட்ட விசேட வைத்தியர்களை முன்கூட்டிய ஓய்வு பெறும் அபாயத்தில் தள்ளியுள்ளது.
அரச வைத்தியசாலைகளில் விசேட வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதை 63 ஆக நீட்டித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மற்றும் 2024 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் திகதி அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் ஆகியவை வழங்கப்பட்ட போதிலும், பொது நிர்வாக அமைச்சு உத்தியோகபூர்வ சுற்றறிக்கை அல்லது வர்த்தமானி வடிவில் முடிவை நடைமுறைப்படுத்த தாமதப்படுத்தியது.
எவ்வாறாயினும், தற்போதைய பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நிலைமையை சீர்செய்வதற்கு சரியான திசையில் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன்படி, வெளியிடப்படவுள்ள புதிய வர்த்தமானி மூலம் பொது நிர்வாக அமைச்சு சுற்றறிக்கையை விரைவில் வெளியிட வழி வகுக்கும்.
இந்த நிர்வாகச் செயலற்ற தன்மை டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் 60 வயதை எட்டும் நிபுணர்களிடையே அவர்கள் தம் சேவையைத் தொடர அனுமதிக்கப்படுவார்களா என்ற நிச்சயமற்ற நிலையை உருவாக்கியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
12 minute ago
18 minute ago
1 hours ago