2025 ஏப்ரல் 17, வியாழக்கிழமை

வியாழேந்திரனுக்கு பிணை

S.Renuka   / 2025 ஏப்ரல் 08 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மார்ச் 25ஆம் திகதி  இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (௦8) உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான 5 சரீரப் பிணைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபா ரொக்க பிணையில் வியாழேந்திரன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், இன்று செவ்வாய்க்கிழமை (௦8) கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் மணல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்காக ரூ.1.5 மில்லியன் இலஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் அவர் மார்ச் 25ஆம் திகதி அன்று மாலை கொழும்பு, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது ஏப்ரல் முதலாம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதனையடுத்து அவர் சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

ஏப்ரல் 01ஆம் திகதி முன்னிலையாகிய போது எதிர்வரும் 08ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டார்.

அத்துடன், சந்தேக நபருக்கு பயணத் தடையையும் நீதிமன்றம் விதித்தது.

இந்த நிலையில், எஸ்.வியாழேந்திரனை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (௦8) உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு ஜூன் 24ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X