2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

வயரை அறுத்த மாணவி மின்சாரம் தாக்கி மரணம்

Janu   / 2024 ஜூன் 12 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தையல் இயந்திரத்தின் மோட்டாருடன் இணைக்கப்பட்ட  வயரின் செருகியை அறுத்து, பாதுகாப்பற்ற முறையில் மின் இணைப்பைப் பெற முற்பட்ட 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிலியந்தலை தும்போவில, துவாவத்த வீதி, 5வது லேன், பிரதேசத்தை சேர்ந்த , நுகேகொட மஹாமாயா பெண்கள் கல்லூரியில் கல்வி கற்கும்  நிஷானி பியூமிகா வென்ரோவன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவியின் பிரேத பரிசோதனை களுபோவில போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர் .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .